இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வித் துறைக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு

சர்வதேச சிறுவர் தினத்தை ஒட்டி இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக கல்வித்துறைக்கென அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவத்துள்ளார்.

நாடு முழுவதும் 409 ‘மகிந்த உதய தொழிநுட்ப கல்லூரிகள்’ அமைக்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டம் சர்வதேச சிறுவர் தினமான இன்று ஆரம்பமாகவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவிடப்படவுள்ளன.

பாணத்துறை ஸ்ரீ தக்சலா மாகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply