முன்னாள் புலி உறுப்பினர்கள் 2000 பேர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைவு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் சுமார் 2000 பேர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான வைபவம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களில் முதற்கட்டமாகவே 2000 பேர் இன்று இணைக்கப்படுவதாக சிவில் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கும் மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 5000 பேரை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்து அவர்களை வடபகுதியின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்துக்கு அமைய 2000ற்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் ஒரு தொகுதியினருக்கே இன்றையதினம் நேர்முகப்பரீட்சை நடத்தி நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் மேஜர் மென்டிஸ் குறிப்பிட்டார்.

இன்று முதல் சிவில் பாதுகாப்புப் படையில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். இவர்களுக்கு மாதாந்தம் 18000ற்கும் குறையாத சம்பளம் வழங்கப்பட விருப்பதுடன் ஏனைய வசதிகளும் இவர்களுக்குச் செய்துகொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply