மகிந்த சிந்தனையில் உள்ள கல்வி தொடர்பான பக்கத்தை எலி கடித்து விட்டதா ?
கல்விக்கு முன்னுரிமை வழங்கி, இலங்கை தெற்காசியாவில் அறிவில் கேந்திர நிலையமாக மாற்ற போவதாக வாய்பேச்சு பேசி, மகிந்த சிந்தனையில் உள்ளடக்கிய பக்கத்தை எலி கடித்து விட்டதா என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உத்தியோபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
குடிநீருக்கான கட்டணத்தை 20 வீதத்தினால் அதிகரித்து, கோடிக்கணக்கில் அரசாங்கம் செய்து வரும் தண்ணீர் விரயத்திற்கான சுமை மக்கள் மீது ஏற்றபட்டுள்ளது.
அத்துடன் அடுத்த சில தினங்களில் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் கட்டணங்களை உயர்ந்த அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது எனவும் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.
சமூக, பொருளாதாரம், அரசியல், கலாசாரம் என நாட்டின் அனைத்து துறைகளும் கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளன. தற்போதைய அரசாங்க்தின் ஆட்சியில் நாடு பல்வேறு அபாயகரமான மற்றும் ஆபத்தான கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது.
ஆனால் அரசாங்கத்தின் வெட்கமற்ற செயற்பாடுகள், பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது காலம் தாழ்த்தி வருவது மற்றும் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரச்சினையை மூடி மறைப்பதால், கல்வித்துறையின் நெருக்கடி நிலைமை மேலும் பாரதூரமாகி வருகிறது.
அதேவேளை கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றுவதற்காக அரசாங்கம் சிலரை ஆலோசகர்களாக நியமித்தது. பொறி வெடிகள், கண்ணி வெடிகள், கிளைமோர் குண்டுகள், தற்கொலை குண்டுகள் குறித்து ஆலோசனை பெறுவதற்காகவா அவர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்?.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை பிடிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் செய்து கொண்ட ரகசிய உடன்படிக்கை, அதில் காணப்பட்டுள்ள இணங்கள் தொடர்பான விடயங்களை உடனடியாக நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தேசப்பற்று என்ற ஆடையை அணிந்து கொண்டுள்ள ஜாதிக ஹெல உறுமய மற்றும் பஞ்சாயுத கட்சியினர், அரசாங்கம், முஸ்லிம் காங்கரஸூடன் செய்து கொண்டுள்ள ரகசிய உடன்பாடு தொடர்பில், கசாயத்தை குடித்தவர்களை போன்று ஏன் வாயை மூடி கொண்டிருக்கிறீர்கள் என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம் எனவும் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply