வெளிசக்திகளின் அழுத்தம் சமாதான சீர்குலைவுக்கே வழிவகுக்கும் – பீரிஸ்

பிரச்சினைகளை தீர்க்கும் போது ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு முறைகளை கையாள்வது ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைக்கு மாறானது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாட்டின் சுயாதினம், சமநிலை மற்றும் கலாசார விழுமியங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என ஐநாவின் 67வது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதனை எற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.  

தெரிவு செய்யப்பட்ட முறையிலும், பலவந்தமான முறையிலும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு முரணானது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வேறு தரப்பினரை விடவும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற காரிசனையை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும் வெளிச்சக்திகளின் தேவையற்ற அழுத்தம் நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவாது எனவும் அது சமாதான முயற்சிகளுக்கு தடையாகவே அமையும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply