1,200 பட்டதாரிகளுக்கு நியமனம்
ஆயிரத்து 200 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கல்விநிர்வாக துறையில் சேவையாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட பட்டதாரிகளுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. அதிபர்கள் சேவையில் அதிபர் தரநிலைக்கான 2 ஆயிரத்து 178 பேருக்கும், கல்வி நிர்வாக துறை சேவையில் 150 பேருக்கும் மற்றும் அதிபர்கள் சேவையில் மூன்றாம் தரத்திற்கு 793 பேருக்கும் இதன்போது நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பரிவு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க எதிர்கால சந்ததியினரை முன்னேற்ற பாதைக்கு கொண்டுச் செல்வது ஆசிரியர்களின் பொறுப்பு என குறிப்பிட்டார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply