கூட்டமைப்பை முஸ்லிம்கள் தங்களது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம், தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபையில் சர்வகட்சி ஆட்சியை அமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரிந்துரை செய்ததாகவும் இதற்கு ஏனைய எந்தத் தரப்பினரும் இணங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கைகளின் போது முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களின் நிலைமை குறித்து கருத்து வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு போன்ற விடயங்கள் குறித்து ரொபர்ட் ஓ பிளக்கிற்கு, அமைச்சர் ஹக்கீம் விளக்கமளித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply