தபால் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்பட்டும் -ஜீவன் குமாரதுங்க

தபால் கட்டணங்கள் வெகு விரைவில் மறு சீரமைக்கப்படவிருப்பதாக தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  இதன்படி அதிகரிக்கப்பட்ட புதிய தபால் கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.  சாதாரண தபால் கட்டணம் 5 ரூபா விலிருந்து 15 ரூபாவாலும் தபால் அட்டைக்கான கட்டணம் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்படலாமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எரிபொருள் விலையதிகரிப்பு மற்றும் ஏனைய செலவினங்களை ஈடு செய்யும் வகையிலேயே தபால் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருப்பதாகவும் கடந்த ஆறு வருடங்களாக தபால் கட்டணங்களில் எவ்வித மறுசீரமைப்பும் முன்னெடுக்க வில்லையென்றும் அமைச்சர் கூறினார்.

தபால் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான விவரங்கள் நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதும் முதல் அதிகரிக்கப்பட்ட புதிய விலைக் கட்டணங்கள் அமுல்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply