வட மாகாண ஆசிரியர் நியமனங்களில் குறைபாடு! டக்ளஸ் கண்டுபிடிப்பு

மஹிந்த சிந்தனைக்கு அமைவாக ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லையென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு விளக்கக் கடிதமொன்றை எழுதியுள்ளார். அதன்பிரகாரம் நாடளாவியரீதியில் ஆயிரம் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மூவாயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் விஞ்ஞானம் 500, கணிதம் 500, ஆங்கிலம் 1000 மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) 1000 என புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 90 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் ஆசிரிய நியமனங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதுடன், இதனடிப்படையில் விஞ்ஞானம் 45, கணிதம் 45, ஆங்கிலம் 90, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) 90 என நியமனங்கள் வழங்கப்படவேண்டிய நிலையில் விஞ்ஞானம் 5, கணிதம் 36, ஆங்கிலம் 5, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) 56 என ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் மடு மற்றும் வவுனியா கல்வி வலயங்களிலும் மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிகளவான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது என்பதுடன் இதனால் இப்பாடநெறிகளை கற்கும் மாணவர்கள் உள்ளபோதிலும் இப்பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளில் விஞ்ஞான கல்வி வழங்கமுடியாதுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்குமாறும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply