ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதியளிக்கும் ?
ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்க அரசாங்கம் அனுமதியளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பில் அமெரிக்கா விதித்திருந்த தடை உத்தரவினை இலங்கை உரிய முறையில் பின்பற்றியுள்ளதனால் இந்த சலுகை வழங்கப்படலாம் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட காலத்தில் இலங்கை அரசாங்கம் இறக்குமதி நடவடிக்கைகளை வெகுவாக குறைத்துக் கொண்டிருந்தது. அதிகளவு மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்குமாறு அமெரிக்காவிடம் கோரப்பட உள்ளதாக வெளிவிககார அமைச்சு அறிவித்துள்ளது.
அநேகமாக இந்தக் கோரிக்கைக்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இணங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் மீளவும் கூடிய அளவில் ஈரானிடமிருந்து இலங்கை மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply