பாகிஸ்தானில் நிலநடுக்கம் 80 பேர் பலி
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் 80 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிச்சடர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 400 மைல் தொலைவிலுள்ள பலோசியஸ்ரன் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பலோசியஸ்ரன் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்டு ஆப்கான் மாகாணத்தின் எல்லைப் பகுதி வரை இந்த நிலநடுக்கம் நீடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தளவில் பொதுமக்கள் 50 பேர் உயிரிழந்ததுடன், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பலோசியஸ்ரன் பொலிஸ் அதிகாரி ஆசிப் நவாஷ் கோஸ் கூறினார்.
வடக்குப் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர்ப் பகுதியில் கடந்த 2005ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானவர்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர் என்பது தெரிந்ததே.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply