சிறப்பு பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புகிறார் பான்கீ மூன்
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரத் திணைக்களத்தின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பெறுப்பதிகாரியாக சாமுவேல் தற்பொழுது செயற்பட்டு வருகிறார்.
இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய தரப்பினரைச் சந்தித்து சாமுவேல் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்துகொள்வதற்கும் அவர் தீர்மானித்திருப்பதாகவும், கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகம் சாமுவேலுக்கு மேலதிக விபரங்களை விளக்கிக் கூறுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது இலங்கை விடயத்தில் அறிந்துகொண்ட மற்றும் சேகரித்த விபரங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையொன்றை சாமுவேல், ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனிடம் கையளிப்பார் எனக் கூறப்படுகிறது.
அத்துடன், இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும், சாமுவேல் பிறிதொரு அறிக்கையைச் சமர்ப்பிப்பார் எனத் தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply