கடந்துபோன சரித்திரத்தில் எம்மால் உண்மையான சுதந்திரத்தை நினைவுகூர முடியவில்லை தேசிய தின வைபவ உரையில் ஜனாதிபதி
இலங்கையின் 61 ஆவது தேசிய தின வைபவத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆற்றிய முழுமையான உரையை இங்கே தருகிறோம்
இலங்கையர்களாகிய நாம் எல்லோரும் மனதால் பிரார்த்தித்த ஒன்றுபட்ட தாய்நாட்டிலிருந்து இன்று நாம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தோம் என்பதை மிகப் பெருமையுடன் தேச மக்களுக்கு கூற விரும்புகின்றேன். தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் சுயாதீனத்திற்காகவும் உயிர்த் தியாகம் செய்ய முன்வந்த, அத்துடன் அப்போராட்டத்திற்கு மனதார ஆசீர்வாதம் வழங்கிய எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை பெரும் அன்புடன் அவதானிக்கின்ற தேசத்தின் எதிர்காலத்திற்குச் சொந்தக்காரர்களான அன்புள்ள மகளே, மகனே,
இற்றைக்கு 61 ஆண்டுகளுக்கு முன்னர் எமது பெருமைமிக்க தாய்நாடு பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் பிடிக்குள் இருந்து சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய பல்வேறு ஐரோப்பிய இனத்தவர்களுக்கு முழுமையாகவோ அல்லது பாதியாகவோ ஆதிக்கத்துக்கு உட்பட்டு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் 1948 பெப்ரவரி 04 ஆந் திகதி பிரித்தானியர்களினால் எமக்கு தேசிய சுதந்திரம் வழங்கப்பட்டது.
அந்த நேரமாகும்பொழுதுகூட, 1818 இலும், 1848 இலும் எமது மக்களால் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. வீர மொணரவில கெப்பிட்டிப்பொல, வீர புரன்அப்பு ஆகிய வீரர்கள் அப்போராட்டங்களில் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். எமது சுதந்திரத்தைப்பற்றிச் சிந்திக்கின்ற ஒவ்வொரு கணத்திலும், எமது நினைவுக்கு வருவது வேறெவரும் அல்ல, அந்த தியாக வீரர்களே.
ஆயினும், தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளுக்கு எமது தாய்நாடு ஆளாகியதினால், எமது தேசத்திற்கே உரிய எதிர்காலப் பயணம் பல சவால்களை எதிர்நோக்கியது. எமது அறிவு, தொழினுட்பம், பல்வேறு கலைகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான அபிவிருத்தி இடைநடுவில் நின்றுவிட்டன. 1948 பெப்ரவரி 04 ஆந் திகதி பிரித்தானியர்கள் எமக்கு சுதந்திரம் வழங்கியதையடுத்து எங்களுக்குரிய விதத்தில் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபட எமக்கு சந்தர்ப்பம் உருவாகியது. ஆயினும், பேதங்களை ஏற்படுத்தி எமக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த சமூகத்தை, ஒரேகுடையின் கீழ் ஒன்றுபடுத்தி சரியான வழியில் வழிநடாத்திச் செல்ல எம்மால் சரியாக இயலவில்லை. அதனால், சுதந்திரம் பெற்று 30 வருடங்கள் ப+ர்த்தியடையும்போது எமது தேசத்தைப் பிரித்துக் கூறுபடுத்துவதற்கு முயற்சி எடுக்கின்ற பிரிவினைவாத, இனவாத, பயங்கரவாத அரசியலொன்றின் பிறப்பு எம்முன் சம்பவித்தது.
கடந்த ஒவ்வொரு ஆண்டிலும் எமது தேசிய சுதந்திரத்தினை நாம் நினைவுகூர்ந்தோம். ஆயினும், சுதந்திரத்திற்குப் பிறகு, நாம் கடந்துவந்த 30 ஆண்டுகளில் சட்டவிரோத, ஆயுதந்தாங்கிய, பிரிவினைவாத பயங்கரவாதத்துடன்தான் நாம் வாழ்ந்தோம். எனவே, கடந்துபோன சரித்திரத்தில் எம்மால் உண்மையான சுதந்திரத்தை நினைவுகூர முடியவில்லை.
பிரிவினைவாத பயங்கரவாதத்தினால் ஏற்பட்ட அச்சுறுத்தலினால் தமது கிராமங்களையும் காணிகளையும் விட்டுச்செல்ல வேண்டிய நிலை வடக்கில் வாழ்ந்த முஸ்லிம், சிங்கள மக்களுக்கு ஏற்பட்டது. ஜயஸ்ரீ மகா போதிக்கு அண்மையில் பௌத்தர்கள் கூட்டமாக துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டார்கள். காத்தான்குடியில் பள்ளிவாசலுக்குள் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். பௌத்தர்களின் உயர் புண்ணியஸ்தலமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கண்டி தலதா மாளிகைமீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அப்பாவி மக்கள் கூட்டம்கூட்டமாகப் பல இடங்களில் கொலை செய்யப்பட்டார்கள்.
அதுமாத்திரமல்ல, எமது நாட்டின் சரித்திரத்தில் முதல்தடவையாக புலிப் பயங்கரவாதிகளினால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழாத, தமக்கு அடிபணியாத தமிழ்மக்களும் வாழாத, புதுவிதமான பாசிச அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டார்கள். தமிழ்மக்களின் ஜனநாயக மக்கள் தலைவர்கள் பலரை பயங்கரவாதிகள் கொலை செய்தார்கள். எமது நாட்டுக்கு தலைமைத்துவம் தாங்கிய மக்கள் தலைவர்கள் பலர் பிரிவினைவாத பயங்கரவாதிகளினால் கொலை செய்யப்பட்டனர். முழு நாடுமே பீதியில் மூழ்கியது.
உலகத்தின் பலம்வாய்ந்த பயங்கரவாத இயக்கத்தின் அச்சுறுத்தலுக்கு எமது நாடு இரையானது. அந்த பிரிவினைவாத பயங்கரவாதிகள் தமது குறிக்கோளான, அதாவது இந்த நாட்டைப் பிரித்து தமிழீழமொன்றை உருவாக்குவதற்கான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அண்மித்துக் கொண்டிருந்தது. தாய்நாட்டை இரு கூறுகளாக்கி பிளவுபடுத்துவதுடன் ஏற்படுகின்ற பயங்கரவதாதத்தின் வெற்றியை “சொல்லப்பட்ட சமாதானமாக” ஏற்றுக் கொள்ளுமாறு அன்றிருந்த ஆட்சியாளர்கள் எம்மை வற்புறுத்தினார்கள். நிலத்தின் அதிகாரம், கடலின் அதிகாரம், வான்பரப்பின் அதிகாரம் மாத்திரமல்ல, தற்கொலை பயங்கரவாதிகளின் அதிகாரத்துடன் பயங்கரவாத இயக்கமொன்றின் முன்னே அடிபணிதல், சமாதானத்தை வெற்றிகொள்வதற்கான வழிமுறையாக ஏற்றுக்கொள்ளும்படி பல்வேறு வெளிநாட்டுச் சக்திகள்கூட எமக்குப் புரியவைப்பதற்கு முயன்றன.
அத்துடன், சில சர்வதேச நிறுவனங்கள் எமது நாடு பலவீனமானதொரு நாடாக ஆளாகியுள்ளதென எடுத்துக்காட்ட முயற்சி செய்தமையினால் இலங்கையில் பிறந்த நாம் அனைவரும், எமது தாய்நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலைகுறித்து பெரும் வேதனைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்கள் மனதால் அழுதார்கள்.
எமது மகத்துவம் மிக்க தாய்நாட்டினால் தாங்கிக்கொள்ள முடியாத அந்த துரதிஷ்டவசமான நிலைக்கு இறுதியில் நாம் சவால் விடுத்தோம்.
அன்று 2005 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் என்னை இந்த நாட்டின் தலைமைத்துவத்திற்குக் கொண்டுவந்தது, அந்தத் துரதிஷ்டவசமான நிலையுடன் போராடுவதற்கே – அந்தத் துரதிஷ்டமான நிலையைத் தோல்வியுறச் செய்து தேசத்திற்கு வெற்றியைப் பெற்றுத் தருவதற்கே – பிரிவினைவாத பயங்கரவாதத்தின் வெற்றியினால் ஏற்படுகின்ற வெட்கமற்ற சமாதானத்திற்குப் பதிலாக பிரிவினைவாத பயங்கரவாதத்தின் தோல்வியினால் ஏற்படுகின்ற கௌரவமான சமாதானத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கே ஆகும்.
காலத்தினால் முன்கொண்டுவரப்பட்ட இந்தச் சவாலை வெற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு, 2005 ஜனாதிபதி தேர்தலின்போது நீங்கள் என் மீதும் எமது அரசின்மீதும் ஒப்படைத்தீர்கள். கஷ்டமானதும் ஆபத்தானதுமான சவாலை எதிர்நோக்கி எப்படியாவது அதனை வெற்றிகொள்வேன் என்ற உறுதியுடன் நாம் அதனை எதிர்கொண்டோம்.
தோல்வி என்பது வெற்றியின் தாய் என்று சொல்லப்படுகின்றது. கடந்த காலங்களில் இருந்த பல அரசாங்கங்களினாலும், பல தலைவர்களினாலும் பிரிவினைவாத பயங்கரவாதத்துடனான இப்பிரச்சினையை யுத்தத்தின் மூலமும் பேச்சுவார்த்தைகளின் மூலமும் தீர்த்துக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன என்பது ஒரு இரகசியமல்ல. அந்தத் தோல்வியினூடாக வெற்றியை நோக்கிச் செல்லவேண்டுமென நான் தீர்மானித்தேன். அன்று, 2005 ஜனாதிபதித் தேர்தலில் “மஹிந்த சிந்தனை” கொள்கைப் பிரகடனத்தில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:
“கடந்த காலத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகளிலும் இருந்த நன்மை தீமைகளை முறையாக விசாரித்தறிந்து புதிய வழியொன்றை மேற்கொள்ள நான் உத்தேசிக்கின்றேன். அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும்பொழுது உரிய அடித்தளமாக பிளவுபடாத நாடு, பெரும்பான்மை கருத்தொருமைப்பாடு, கௌரவமான சமாதானம் அமையும்”.
எவ்வாறாயினும். முழுத்தேசத்தையும் பல தசாப்தங்களாக பீதிக்கு ஆளாக்கிய கோழைத்தன பயங்கரவாதத்தை குறுகிய காலப்பகுதியான 2 ½ ஆண்டுகளில் முழுமையாக தோல்வியடையச் செய்ய இன்று எம்மால் இயலுமாயிற்று. எமது தரைப்படை, கடற்படை, வான்படை, பொலிஸ், பொலிஸ் விசேட செயலணி, சிவில் பாதுகாப்புச் சேவை ஆகிய எல்லோரும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை முறையாகவும் ஆகக்கூடிய அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றியமையினால் அந்த மகத்தான வெற்றி இன்று எமது நாட்டுக்குக் கிடைத்துள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், பிரிவினைவாத பயங்கரவாதத்தின் கருமைநிழலை கூடியளவு இல்லாமல்செய்த தேசமொன்றின் தேசிய சுதந்திர தினத்தினை நினைவுகூருவதற்கு எமது வீரமிக்க படைவீரர்கள் எமக்குச் சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்துள்ளார்கள்.
சரித்திரம் ப+ராவும் காட்டிக்கொடுத்தல், அடிபணிதல் போன்றவை இருந்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன் காரணமாக, அபகீர்த்திக்கு ஆளானவர்களும் எமது நினைவிற்கு வருகின்றனர். அதேபோன்று, வீரம், மகத்துவம், தேசப்பற்று ஆகியவற்றினால் முழுமையடைந்த துட்டகைமுனு, கஜபா, விஜயபாகு போன்ற மன்னர்களைப் பற்றி இன்றும் நாம் நினைவுபடுத்திப் பேசுகின்றோம் அல்லவா?
எமது படைகள் அந்தக் கடந்தகால வீரமிக்க கௌரவத்தை உயர்ந்த மட்டத்தில் பாதுகாத்து எதிர்காலத்திடம் ஒப்படைத்துள்ளது. உலகத்தின் கொடூரமான பயங்கரவாத இயக்கமாக அழைக்கப்பட்ட எல்ரீரீஈ இயக்கம் நாட்டின் ஒற்றையாட்சிக்கும் சுயாதீனத்திற்கும் ஏற்படுத்திய பயமுறுத்தலைச் சுக்குநூறாக்குவது எளிதானதொரு காரியமல்ல.
நாட்டில் கௌரவமான சமாதானத்தை உருவாக்கக்கூடியதொரு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிசிறந்த சந்தர்ப்பத்தை தமது தாய்நாட்டுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் தமது உடலின் அங்கங்களை மாத்திரமல்ல, தமது உயிரையே தாய்நாட்டுக்காகத் தியாகம் செய்தார்கள். அப்பாவித் தமிழ் மக்களுக்கு கஷ்டமேற்படுவதற்கு இடமளியாமல், மிகக் கவனமாக பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை எமது படைவீரர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றார்கள். உருவாகிக் கொண்டிருக்கின்ற கௌரவமான சமாதானம் வேறு எந்த நாட்டிலும் வாழுகின்ற, மக்கள் அனுபவிக்கின்ற சமாதானத்தைவிட மிக முக்கியத்துவம் வாய்ந்ததற்கான காரணம், அந்தப் படைவீரர்களின் அளப்பரிய தியாகத்தினால் இந்தச் சமாதானம் ஏற்பட்டமையே.
இந்த வெற்றியின் பின்னால் பல காரணிகள் உள்ளன. பொருளாதாரக் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழுகின்ற எமது சகோதர மக்கள், எவ்வித பேதமுமின்றி இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள். எங்களுக்கு ஒத்தாசை வழங்கினார்கள். பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக சரியானதொரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பதை அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். சரித்திரத்தில் எந்தவொரு காலத்தையும்விட எமது நாட்டின் தாய்மார், தந்தைமார் தமது பிள்ளைகளைப் பாதுகாப்புப் படைகளுக்கு, பொலிசுக்கு, சிவில் பாதுகாப்புச் செயலணிக்கு பெருமளவில் பெற்றுத் தந்திராவிட்டால் எமக்கு இந்தப் போராட்டத்தில் ஒருநாளும் வெற்றிபெற முடியாது போயிருக்கும். நண்பர்களே, அவர்களுடைய பாரிய அர்ப்பணிப்பு எந்தவிதத்திலும் வீண்போகவில்லை. அந்தப் பாரிய அர்ப்பணிப்பின் பெறுபேறாகவே இன்று நாடு ப+ராவிலும் தேசிய கொடி பறக்கின்றது.
தமது அறிவின் மூலமே எமது படையினர் இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தார்களே தவிர, வேறெந்த வெளிநாட்டு விசேட நிபுணர்களின் உதவியை எமது படைகள் பெற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று எமது படையினுள் விசேட தன்மைகள் நிலவின.
அதனால்தான், எந்த நேரத்திலும் அவர்கள் எங்களால் முடியாது என்று சொல்லவில்லை. “நாட்டுக்காக நாங்கள் இப்பணியை எப்படியாவது செய்துமுடிக்க வேண்டும்” என்பதை மாத்திரமே அவர்கள் எப்போதும் சிந்தித்தார்கள். அவ்வாறு சிந்தித்து பணியாற்றக்கூடிய தைரியம் எமக்கு இருந்தமையினால்தான் எமது நாட்டுக்கு இந்த வெற்றி கிடைத்தது. ஒன்றை மறந்துவிட வேண்டாம்! அண்மைக்காலச் சரித்திரத்தில் உலகத்தின் பல நாடுகளில் நிலவிய பிரிவினைவாத பயங்கரவாத இயக்கங்கள் அங்கெல்லாம் அநேகமாக வெற்றிபெற்றன. ஆயினும், இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்து, பிரிவினைவாதத்தையும் தோல்வியுறச் செய்து, நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க எம்மால் முடிந்துள்ளது.
உலகத்தில் எத்தனை நாடுகள் இருந்தாலும், ஒருவருக்கு தான் பிறந்த நாடு போன்று பாதுகாப்பானதொரு இடம் வேறு இருக்காது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான இந்த துரதிஷ்டவசமான பிணக்கினால் தாய்நாட்டை விட்டுச்சென்று வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தாம் பிறந்த நாட்டுக்கு, தான் வாழ்ந்த கிராமத்துக்கு திரும்பி வருவதற்கு இப்போது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் காரணமாக நாட்டைவிட்டுச் சென்ற இலங்கையர்களான சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் உட்பட எல்லா பிரசைகளையும் மீண்டும் பிறந்த தேசத்துக்கு வருமாறு நான் இச்சந்தர்ப்பத்தில் முழுத் தேசத்தின் சார்பில் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.
சிலர் தோல்வி அடையச் செய்ய முடியாது என அடிக்கடி சொன்ன பிரிவினைவாத பயங்கரவாதத்தை இன்னும் சில நாட்களில் முற்றுமுழுதாக தோல்வியுறச் செய்வோம் என்பதில் எனக்கு நல்ல நம்பிக்கையுண்டு. ஆனாலும், அத்துடன் எம் முன்னுள்ள சவால் முழுமையாக முடிந்துவிட்டது என நாம் சிந்திக்கக் கூடாது.
சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை சில துறைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. சிறுவர் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் நாம் திருப்தியடையக்கூடிய நிலையைப் பெற்றுள்ளோம். எமது பிள்ளைகளில் நூற்றுக்கு 97 வீதமானோர் கல்வி பெறுவதற்காக பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கின்றனர். உலகத்தின் பல நாடுகளில் இலவச சுகாதார சேவை, இலவசக் கல்வி போன்றவை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்காதபோதிலும் நாம் அந்தச் சமூகப் பொறுப்புக்காக அர்ப்பணித்த அரசொன்றை உருவாக்கியுள்ளோம்.
ஆயினும், சந்தோஷப்படக்கூடிய இவ்வாறான விடயங்கள் இருந்தாலும், எம்மால் வெற்றிபெற வேண்டிய பல சவால்கள் எஞ்சியுள்ளன.
பாடசாலைக்கு அனுமதிக்கப்படுகின்ற பிள்ளைகளுக்கு இதைவிடக் கூடுதலான திறனுள்ள, தேசத்தின் எதிர்காலப் பயணத்திற்குப் பொருத்தமான கல்வியை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். வறுமை எங்கு தலைதூக்குகின்றதோ, அதேயிடத்தில் நாம் அதைத் தோல்வியுறச் செய்தல் வேண்டும். மனோபாவ ரீதியில் மாற்றமுள்ள அரசசேவையொன்றை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும். தனது எஜமான் மக்கள்தான் என்று கவனிக்கக்கூடிய நிலைக்கு அரசசேவை கொண்டுவரப்படல் வேண்டும். மோசடிக்கும், வீண்விரயத்துக்கும் இடமளிக்காத நல்லாட்சி – கொண்ட – சௌபாக்கியமானதும், சுபீட்சமானதுமான தேசமொன்றை உருவாக்க வேண்டிய உண்மையான சவால் எம் அனைவரின் முன்னால் உள்ளது.
எம்முன்னால் எழுந்திருந்த பலம்வாய்ந்த ஓர் எதிரியை எமது தேசம் இப்போது தோல்வியுறச் செய்துகொண்டிருக்கின்றது. அதேபோன்று, எம்முன் எழுந்துள்ள ஏனைய உள்நாட்டு எதிரிகளையும் தோல்வியுறச் செய்வதற்கு இப்போது எமக்கு முடியுமானதாக இருத்தல் வேண்டும். அந்தப் புதிய சவால்களுக்குத் தேவையான விதத்தில் எம்மை மாற்றியமைத்துக்கொள்ள நம்அனைவருக்கும் இயலுமானதாக இருத்தல் வேண்டும். தேசம் என்ற வகையில் ஒன்றுபட்டு, குறிக்கோள்களுடன் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் ரீதியாக எழுந்துநிற்கக்கூடிய புதியதொரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளமை நல்லதொரு காரியமாகும்.
இன்று எமது தேசியக் கொடிக்கு புதியதொரு சக்தி ஏற்பட்டுள்ளது. தேசிய கீதத்திற்கு புதியதொரு வலு ஏற்பட்டுள்ளது. படைவீரர்கள் வடக்கிற்குக் கொண்டுசென்ற தேசியக் கொடிகள் இன்று வடபகுதி மக்களின் கைகளில் பறக்கின்றன. மக்கள் அனைவரும் தேசியக் கொடியின் நிழலில் ஒன்றுபட்டு தமது நாட்டின் அடுத்த சவாலுடன் போராடுவதற்கு தயாரான மானசீகத்துடன் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு மிகக் கூடுதலாக தமது தேசத்தின்மீது அன்பு செலுத்துகின்றனர்.
காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு 61 ஆண்டுகளுக்குப் பின், தேசத்தை மீண்டும் மகத்துவத்துடன் உயர்த்தி வைப்பதற்கு சரித்திரம் எமக்குப் பெற்றுத் தந்துள்ள இந்தப் புதிய சந்தர்ப்பத்தினை விரயமாக்காமல் சரியாக உள்வாங்கிக் கொள்வதற்கு நாம் அனைவரும் இப்போது தயாராக வேண்டும்.
தேசம் எம்மிடமிருந்து புதியதோர் எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றது! மாறுபட்ட எதிர்காலம்! கடந்த காலங்களில் நாம் கூட்டாக அனுபவித்த கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஏற்படாத புதியதோர் எதிர்காலம்! எங்களுக்கு “முடியாது”, எங்களுக்கு “இல்லை” என்று சிந்திப்பதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு வக்காலத்துவாங்கும் தன்மை எஞ்சியிருந்தால் அவைகளையும் நம் மனதிலிருந்து நாம் நீக்கிக்கொள்ள வேண்டும். அடிமையற்ற, பெருமைமிக்க, மகத்துவமான வரலாற்றை உரிமையாக்கிக்கொண்ட மக்களென்ற வகையில் எமது எதிர்காலத்தைப்பற்றி கவனம் செலுத்தவேண்டும். வெளியார்களுக்கு வக்காலத்துவாங்கும் தன்மை, அடிமைத்தன்மை ஆகியவற்றை நிரூபிக்க முயற்சி எடுக்க வேண்டாம்! சுயாதீனத்தை, மகத்துவத்தை நிரூபிப்பதற்கு முயற்சி எடுங்கள்! சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய எமது மக்களுக்கு ஒரேவிதத்தில் அன்பு செலுத்துகின்ற, மதிப்பளிக்கின்ற பிரசையாக எழுந்து நில்லுங்கள்! பேதங்களை விதைத்த காலம், கடந்தகாலம்! ஓற்றுமையை விதைக்கின்றவர்களுக்கே எதிர்காலம் உரியது!
சமூக அநீதிகளை விதைத்த காலம் கடந்த காலத்துக்கு உரியது! சமூக நீதியைக் கட்டியெழுப்புகின்றவர்களுக்கே எதிர்காலம் உரியது!
தோல்வியடையச்செய்ய முடியாது என பலர் எமக்குச் சொல்லித் தந்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோல்வியடையச்செய்ய முடிந்த எமக்கு, மாற்றமுற்ற தாய்நாடு, மாற்றமுற்ற எதிர்காலம் ஆகியவற்றை உருவாக்குவது எப்படித்தான் கஷ்டமாகும்? எவ்வளவுதான் கஷ்டமானாலும் அதற்காக அர்ப்பணிப்பைத் தவிர இலங்கை மக்களுக்கு நீதியை நிறைவேற்ற எமக்கு வேறு வழி எதுவும் இல்லை.
வேறு எதனையும்விட, எமது மக்களின் ஜீவசக்திமீதும், பெருமையின்மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. எமது படைவீரர்கள் எனது அந்த நம்பிக்கை சரியென்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற தேசிய நவோதய யுகத்திற்கு நாம் எமது தேசத்தை எடுத்துச் செல்வதும், அதற்காக அர்ப்பணிப்பதும் அந்த நம்பிக்கை எம்மிடம் இருப்பதனாலேயாகும்.
எதிர்பார்ப்புகளின் நூற்றாண்டு தற்போது நம்முன் உள்ளது. யுகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியவர்களாக வரலாற்று மேடையிலிருந்து வெளியேறிச்செல்ல முடியுமாயின், அதைப்போன்ற மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியுமா? நாம் அந்த மகிழ்ச்சியை நோக்கிச் செல்லவேண்டும்!
அந்தப் பயணத்தின்போது சொல்லவேண்டியதைச் சொல்வதற்கு நாம் ஏன் தயங்க வேண்டும்? செய்யவேண்டியதைச் செய்வதற்கும் நாம் ஏன் தயங்க வேண்டும்?
எமது நகரங்களில் மிளிருகின்ற பாரிய விளம்பரங்களின் மூலம் எமது அபிவிருத்தியின் அளவு வெளிப்படுகின்றதென நான் நம்பமாட்டேன். எமது மக்களின் முகங்கள், எமது பிள்ளைகளின் முகங்கள் மகிழ்ச்சியினால் மிளிருகின்ற அளவுக்குத்தான் எமது அபிவிருத்தியை அளவிட முடியும் என நான் நம்புகின்றேன். அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.
பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்யும் போராட்டத்தின்போது நாம் பெரியதொரு ஆபத்தை எதிர்நோக்கினோம்! உயிர் ஆபத்து! எமது பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி ஆகியோர் தற்கொலை குண்டுதாரிப் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டும் அந்த ஆபத்துக்களுக்குப் பயந்து தமது பொறுப்புக்களைக் கைவிட்டார்களா? ஏனைய தளபதிகள் இந்த நிலைமையில் பயந்து போனார்களா? எமது சிரேட்ட அமைச்சர்கள் இருவருடைய உயிர்களை பயங்கரவாதிகள் காவுகொண்டனர். ஆனாலும் நாம்…… அந்த உயிராபத்தை எதிர்நோக்க தைரியமில்லாதவர்களாக மாறினோமா? எமது படைவீரர்கள் தமது சகோதர படைவீரர்கள் எதிரிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி உயிர்நீக்கும்போது, உயிராபத்துக்குப் பயந்து இந்தப் போராட்டத்தைக் கைவிட்டார்களா? இவ்வாறு ஆபத்துக்களை எதிர்நோக்க எமக்குச் சக்தியில்லாமல் இருந்தால் இந்த நாட்டை எம்மால் பாதுகாக்க முடியுமா? அதேபோன்று, நாட்டைப் புதிதாகக் கட்டியெழுப்புகின்ற போராட்டத்தின்போதும் எந்தவித ஆபத்தையும் எதிர்நோக்கி, தேவையான தீர்மானங்களை மேற்கொண்டு முன்னோக்கிச்செல்ல ஆயத்தமாக இருக்கின்றோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
ஊழல்களுக்கும் வீண்விரயங்களுக்கும் எதிராக, நல்லாட்சியை இந்த நாட்டில் நிலைநிறுத்துவதற்கான போராட்டத்திற்கு நாம் அந்த அடிப்படையிலேயே செல்கிறோம்.
காலத்தினால் ஏற்படுத்தப்படுகின்ற சவால்களுக்கு ஏற்றவிதத்தில் நாம் மாற்றமடைய வேண்டும். இல்லையெனில், நாம் மேடையிலிருந்து இறங்கிச் செல்லலாம்.
உலக வங்கியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வுல்பன்ஸன் அவர்கள் 1998 ய+லை 05 ஆந் திகதி இவ்வாறு குறிப்பிட்டார்:
“ஓர் இடத்தில் சமூக, பொருளாதார எதிர்பார்ப்புக்கள் சுக்குநூறாகிப்போனால் அங்கு சமாதானத்திற்கு சிறிய இடம் மாத்திரமே இருக்கும். அதேபோன்று அதன் நீடுறுதிக்கும் சிறு இடம் மாத்திரமே இருக்கும்”.
நானும் இதனை உறுதியாக நம்புகின்றேன். தற்போது நாம் பயங்கரவாதத்தினால் மனிதர்கள் மடியாத நாடொன்றை உருவாக்கி வருகிறோம். அதேபோன்று சமூக, பொருளாதார எதிர்பார்ப்புக்கள் சுக்குநூறாகாத மக்கள் வாழுகின்ற நாடாக எமது நாட்டை நாம் மாற்றியமைக்க வேண்டும். அப்படியில்லையென்றால், சமாதானத்திற்கும் அதன் நீடுறுதிக்கும் சிறிய இடம் மாத்திரமே இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
யுத்தத்தினால் பெற்ற வெற்றியை ஏர் மூலம் உறுதிப்படுத்தல் வேண்டும். இல்லையெனில், அவை யுத்தத்தினாலேயே பறிக்கப்பட்டுவிடும். எனவே, நாம் உருவாக்குகின்ற சமூக, பொருளாதார, கலாசார, அரசியல், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு எமது நாட்டை முன்னெடுத்துச்செல்ல தயாராக வேண்டும்.
இறைமை மக்களிடமே உண்டு என்பதை அவர்களுக்குப் புரியவைக்கும் நிலைமையை ஏற்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். எல்லாம் மக்களுக்கும் தேவையான விதத்திலே அது அமைந்துள்ளது என்பதை நம்புவதற்கு முடியாவிடின் அந்த இறைமையின் சக்தி பலவீனம் அடையும். இந்த நாட்டின் விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள், கடல் – மீன்வளம் ஆகிய எல்லாவற்றினதும் சொந்தக்காரர்கள் நாங்களே என்ற நிலைமையை உருவாக்காமல் நாட்டுக்குப் பெற்றுக்கொடுக்கக் கூடிய மாற்றம்தான் என்ன?
வாழ்வதற்குக் காணி, வீடு, பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, தொழில்வசதி ஆகியவற்றை ஏழைகளுக்குப் பெற்றுக்கொடுக்காமல் இறைமையின் பலத்தை உறுதிப்படுத்துவது எப்படி? தமது வாழ்க்கையிலே மாற்றத்தை ஏற்படுத்தாத, புதியதொன்;றை உருவாக்காத பலத்தினால் அவர்களுக்கு நன்மை ஏதும் இருக்குமா?
நாட்டு மக்களின் இறைமை பாதுகாக்கப்படுவதென்பது சமூகப் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகின்றது என்பதாகும். சமாதானத்திற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது என்பதாகும். உறுதியான தன்மைக்கு உள்ள வசதிகள் அதிகரிக்கின்றது என்பதாகும்.
நாம் அதன்மூலம் வெற்றிகொண்ட சமாதானத்தைப் பாதுகாக்க வேண்டும். வெற்றிகொண்ட நீடுறுதியான தன்மையைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எம்மால் அதைச் செய்யமுடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
மகத்துவமிக்க இந்நாளில் இறுதியாக நான் உங்களுக்கு முக்கிய விடயம் ஒன்றைக் கூறுவதற்குச் சந்தர்ப்பம் தாருங்கள்.
நாம் பெற்ற அனுபவங்களினூடாக நாம் பெற்றுக்கொண்ட அறிவை அடிப்படையாக வைத்து இந்த நாட்டை எதிர்கால வெற்றிக்கு விட்டுச்செல்ல எம்மால் முடியும் என்ற நம்பிக்கையின்மீது காலடிவைத்து நில்லுங்கள் என நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
உற்சாகம்கொண்ட – என்றாலும் அமைதியான சிந்தனையுடன், அவசரமாக – என்றாலும் முறையான வாழ்க்கையுடன் நாம் எமது நாட்டை ஏற்றிவைப்பதற்கு தயாராவோம். சவால்களுக்குப் பயப்படாதிருப்போம். எதிர்பார்ப்புக்களை நோக்கிச் செல்வதற்குத் தைரியம் கொள்வோம்.
அதேபோன்று பிரிவினைவாத பயங்கரவாத பிடிக்குள் அகப்பட்டு பல வருடங்களாக கஷ்டப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேச மக்களுக்கு, மீண்டும் வாழ்க்கையை நோக்கி;, மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் நோக்கி காலடி எடுத்துவைக்க தேசத்தின் எல்லா மக்களினதும் ஒத்துழைப்பை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்போம்.
உங்கள் அன்பு, நட்பு, சௌபாக்கியம், சுபீட்சம் ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லாலும் செயலாலும் வழங்க முன்வருவோம்.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே என்று சொல்லப்படுகின்ற நல்வாக்கை நாம் மதிக்கின்றோம். எமது தாய்நாடு ஒரே கொடியின் கீழ் வருகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இன, மத, குல, கட்சி பேதம் பாராது எம்முடன் ஒன்றுபடுமாறு, தாய்நாட்டுக்குத் தமது கடமைகளை நிறைவேற்ற யாவருக்கும் சந்தர்ப்பம் வழங்கும்பொருட்டு நான் எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். நாம் அனைவரும் ஒருதாயின் பிள்ளைகளாக இருப்பதைப்போன்ற மகிழ்ச்சியைவிட இலங்கை மாதாவுக்கு வேறு என்ன மகிழ்ச்சிதான் இருக்கமுடியும்? அந்த மகிழ்ச்சியை எமது தாய்நாட்டுக்கு, உங்கள் அன்னைக்கு பெற்றுக் கொடுப்பதற்காக எம்முடன் ஒன்றுபடுமாறு உங்கள் அனைவரையும் நான் வேண்டுகின்றேன்.
எல்லாவித பேதங்களையும் கொண்ட எண்ணங்களிலிருந்து நீங்கி, எமது நாட்டின் நாலாபுறங்களிலும் சந்தோஷத்துடன் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய எல்லா இனங்களுக்குமுரிய இலங்கைத் தாயின் பிள்ளைகளைப் பாருங்கள்! அவர்கள் நம்பிக்கையுடன் எம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எம்மை விசாரிக்கின்றார்கள். அவர்களின் எதிர்காலத்தை எம்மிடம் வேண்டி நிற்கின்றார்கள். நாட்டின் எதிர்காலம் அவர்களே. அவர்களுக்காக எமது தேசத்தை புதிய வழியில் இட்டுச்செல்வதற்கு உங்கள் அனைவருக்கும் சக்தியும், தைரியமும் கிடைக்கட்டும்!
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply