ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் பல காத்திரமான பரிந்துரைகள் – ஜோன் ரான்கீன்
சகல தரப்பினருடன் உறவுகள் பேணப்படுவது மிகவும் அவசியமானது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். மக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையிலான உறவுகள் வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். உயாஸ்தானிகரிடம் கேளுங்கள் என்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்த, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் பல காத்திரமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புலம்பெயர் தமிழர்களுடனான உறவுகளை விஸ்தரித்தல் என பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply