இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமைச் சான்றிதழ்

இந்தியா, இராமேஸ்வரம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 50 பேருக்கு பிறப்புச்சான்றிதழ்களும் 130 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்களும் 60 பேருக்கு இலங்கை கடவுச்சீட்டுக்களையும் இலங்கை அரசாங்கம் நேற்று சனிக்கிழமை வழங்கியுள்ளதாக த ஹிண்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் உத்தியோகபூர்வமான மொழியாக காணப்படாதபோதே இந்த அகதிகள் தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் அகதிகளாக தஞ்சம் கோரினர் என பிரதி உயர்ஸ்தானிகர் ஆர்.கே.எம்.ஏ.ராஜ்கருணா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply