கண்டி பிரதேசத்தில் அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு

மலையகத்தின் கண்டி மாகாணத்தில் பல பகுதிகளில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு அனர்த்த நிலைமை எச்சரிக்கை 24 மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை 6 மணி தொடக்கம் நாளை மாலை 6 மணி வரை ஹேவாஹெட்ட, அக்குரனை, கங்கவட்டகோரல, உடுநுவர, யட்டிநுவர, ஹரிஸ்பத்துவ, தும்பனை மற்றும் பாத்ததும்பர ஆகிய பகுதிகளிலே மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

காசல்ரி நீர்தேக்கத்தை அண்மித்த நோர்வூட் பகுதியில் பொழியும் கடும் மழை காரணமாக கெசெல்கமுவ ஓயவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு நோர்வூட்டில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதுதவிரஇ கெசெல்கமுவ ஓயவும் கரைபுரண்டு ஓடுவதால் நோர்வூட் கிரிமண்டல வீதியில் உள்ள 15 வீடுகள் பகுதியளவில் நீரில் மூழ்கியுள்ளன.

மலையகத்தின் பல பகுதிகளில் அதிக மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயங்களும் தோன்றியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது..

இதுதவிரஇ வடமத்திய மாகாணத்திலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பல சிறிய வாவிகள் நிரப்பியுள்ளன.

தொடர்ந்தும் மழை வீழ்ச்சி கிடைக்குமாயின் பெரிய குளங்களும் நிரம்பி வழிய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்வரும் மணித்தியாலங்களிலும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யக் கூடிய ஏதுநிலை இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, அனர்த்தத்தை கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தல் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கை அனர்த்த கட்டுப்பாட்டு ஆசிய மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று தினம் குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply