உலக சக்திவலு மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த உரை
டுபாயில் இன்று ஆரம்பமாகும் உலக சக்திவலு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புறப்பட்டுச் சென்றார். 21 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு கொள்ளும் சக்திவலு மாநாட்டில் அனைத்து நாடுகளில் இருந்தும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பான சக்திவலுவை உலகம் முழுவதும் நிலையான அபிவிருத்தியின் பொருட்டு ஈடுபடுத்தும் நோக்கில் உலக சக்தி வலு அமைப்பு கடந்த 2008 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
உலக சக்தி வலு நெருக்கடிக்கு தீர்வை கண்டறிதல், சக்திவலு தொழினுட்ப அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்திற்கான சக்திவலு பாதுகாப்புக்கான கரியமில சக்திவலுவை மேம்படுத்துவது குறித்து உலக சக்திவலு மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply