திவிநெகும சட்டமூலம் இன்று நீதிமன்றத்தில்

திவிநெகும எனப்படும் வாழ்க்கை மேம்பாடு சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மனுக்கள் தொடர்பில் இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிரதிவாதிகள் தரப்பில் சாட்சியமளிப்பதற்கு இன்று சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது. கடந்த 18 ம் திகதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் இறுதியாக இடம்பெற்ற விசாரணைகளின் போது மனுதாரர் தரப்பிற்கு சாட்சியமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனுவொன்றை தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கு சவால் விடுக்கும் வகையில் ஜாதிக்க ஹெல உறுமய பிறிதொரு மனுவை முன்வைத்திருந்தது.

இதுதவிர, இன்னும் சில அரசியல் கட்சிகள் திவிநெகும சட்டமூலத்தை ஆட்சேபித்து தமது மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளன.

இதனிடையே, 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் எழுத்து மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply