தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியல்ல!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியல்ல என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமை தொடர்பில் பேசும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளிட்ட நிர்வாக அலகுகளில் ஆளும் கட்சிக்கு பாரய பெரும்பான்மை பலம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டை பிளவுபடுத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அமைப்பாகவே செயற்பட்டு வந்தது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்நாட்டு சட்டமொன்று தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எனவே கூட்டமைப்பை இலங்கை மக்களின் அரசியல் கட்சியாக கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை அதிகாரங்களில் எவ்வாறு திவிநெகும சட்டம் தாக்கத்தை செலுத்தும் என்பது பற்றி கருத்து வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதனால் அது தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். திவிநெகும சட்டம் பாரியளவில் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply