ஐதேக அமைப்பாளர்களுக்கான 60 ஆசனங்களின் ஒதுக்கீடு இப்படி இருக்கிறது
ஐக்கிய தேசிய கட்சியினால் அமைப்பாளர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள 60 ஆசனங்களும் இளைஞர் அமைப்புகளுக்கோ, மகளீர் அமைப்புகளுக்காகவோ அமைக்கப்பட வில்லை என்று தெரியவந்துள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த விடையம் தெரியவந்துள்ளது.
வடமத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாண கட்சி அமைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் பங்குகொண்டனர்.
கட்சியின் பணிப்புரைக்கு அமைய கிளை அமைப்புக்கள் முறையாக 10 தொகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முறையாக அமைக்கப்படாத கிளை அமைப்புகளில் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசா பிரதிநிதித்துவப்படுத்தும் திஸ்சமாஹாரமவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply