யாழில் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடு! கூட்டமைப்பு தெரிவிப்பு
தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காகவும், இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பரந்துபட்ட ரீதியில் மாநாடு ஒன்றை விரைவில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தவுள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபைத் தலைவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, பிரதேச சபைகளின் முன் நேற்றுத் திங்கள்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நல்லூர் பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்ற கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
போர் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தமிழ் மக்களின் வாழ்வு கோள்விக்குறியாகிறது.
எனவே தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காகவும், இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் நாம் விரைவில் மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த மாநாடு பரந்தளவில் நடத்தப்படவுள்ளது. முற்போக்கு சக்திகள், முஸ்லிம் தலைவர்கள், மலையக மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியதாகவே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. விரைவில் இந்த மாநாடு நடைபெறும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply