பிரித்தானியாவில் கடைசி நேரத்தில் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்

பிரித்தானியாவில் இருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த அகதிகளுள் 10 தொடக்கம் 12 பேர் வரையில் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவர்கள் இறுதி நேரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தடையுத்தரவு கோரல் மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.

அவர்களின் வழக்குகளில் வாதாடிய சட்டத்தரணிகள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். நாடு கடத்தலுக்கு எதிராக சுமார் 12 சட்ட அமைப்புகள் மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தன.

இந்த மனு மீதான விசாரணையை அடுத்து, தமது கட்சிக்காரர்கள் பலரை நாடுகடத்த தடையுத்தரவு பெற்றுள்ளதாக குறைந்தது மூன்று சட்ட அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

இலங்கைக்கு இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால், கைது, சித்திரவதை, உயிர் அச்சுறுத்தல் ஆபத்து இருப்பதாக சட்டவாளர்கள் வாதிட்டிருந்தனர்.

தமது கட்சிக்காரர்கள் மூவர் நாடு கடத்தப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக டங்கன் லூவிஸ் சட்டவாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.

ஜெய்ன் சட்டவாளர்கள் அமைப்பு, ஒருவரின் நாடுகடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இலங்கைக்கு அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக, ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகேயுள்ள குடிவரவுத் தடுப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply