யுத்தத்தில் வெற்றி பெற முடியாது தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை களைய வேண்டும் என நோர்வே வலியுறுத்தியுள்ளது
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் யுத்தத்தி;ல் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு ஆயுதங்களை கைவிட்டு அரசியல் போரில் ஈடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைத் தலைமை நாடுகளின் கோரிக்கையுடன் நோர்வே பூரணமாக இணக்கம் கொண்டுள்ளதாக தெரிவித்த சொல்ஹெய்ம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்து அரசாங்கத்துடன் அமைதிப் பேச்சுவார்தைகளில் ஈடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்திய பாதுகாப்பு செயலாளர் கே.ஆர் நாராயணனுடன் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து எரிக் சொல்ஹெய்ம் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ முனையும் எரிக் சொல்ஹெய்ம் இந்தியாவில் வைத்து சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply