மும்பை தாக்குதலுக்கு வங்காளதேச தீவிரவாதிகளே காரணம் பாகிஸ்தான் கண்டுபிடிப்பு

மும்பையில் நடந்த தாக்குதலுக்கு வங்காளதேச தீவிரவாதிகளே காரணம் என்று பாகிஸ்தான் நடத்திய விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.பாகிஸ்தான் விசாரணை

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய அனைவருமே பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இது குறித்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்து இருக்கிறது.

அதற்கான பதிலை இந்தியா எதிர்பார்த்துள்ள நிலையில், `மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் திட்டம் தீட்டப்படவில்லை’ என்று இங்கிலாந்துக்கான பாகிஸ்தான் தூதர் தெரிவித்தார். அதே நேரத்தில், மும்பை தாக்குதல் தொடர்பாக தாங்களே விசாரிக்கப்போவதாக பாகிஸ்தான் அறிவித்து விட்ட விசாரணை நடத்தி வந்தது.

வங்காளதேச தீவிரவாதிகளே காரணம்

இந்த நிலையில், `மும்பை மீதான தாக்குதலுக்கு சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் முஸ்லிம் பழமைவாத தீவிரவாதிகளே காரணம். வங்காளதேசத்தில் உள்ள தடை செய்யப்பட்ட `ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல் இஸ்லாமி’ இயக்கத்தை சேர்ந்தவர்களே அந்த தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலுக்கு திட்டமிட்டது மற்றும் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததும் அவர்கள்தான்’ என்று பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் (எப்.ஐ.ஏ.) கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இந்த தகவலை இஸ்லாமாபாத்தில் வெளியாகும் ஆங்கில பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இந்த தகவலையே, இந்தியாவுக்கு பதிலாக அளிக்கவும் பாகிஸ்தான் முடிவு செய்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. அது மட்டுமன்றி, அந்த தீவிரவாதிகளை இணைந்து ஒழிப்போம் என்று இந்தியாவிடம் கேட்கவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply