தேசத்துக்கு மகுடம் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி நேற்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண் டபத்தில் நடைபெற்று வரும் “தெயடகிருள” தேசத்துக்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சி நிகழ்வில் நேற்று ஜனா திபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வரை ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் இக்கண்காட்சியைக் கண்டுகளித்துள்ளதுடன் நேற்றைய தினமும் பல்லாயிரக் கணக் கான மக்கள் கண்காட்சியைக் கண்டுகளிக்க வருகை தந்ததாக கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை இரவுடன் இக்கண்காட்சி நிறைவுபெறவுள்ளதால் பாடசாலை மாணவர்களுக்கும், அனைத்துத் துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும். இக்கண்காட்சியைக் கண்டுகளித்து தமது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளுமாறு கண்காட்சியின் பொறுப்பாளர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவிக்கின்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply