கௌதமாலாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 39 பேர் பலி! 100 பேரை காணவில்லை
பசிபிக் கடலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மெக்சிகோ, கௌதமாலா மற்றும் எல் சால்வாடர் நாடுகளின் மேற்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அள்வில் 7.5 ஆக பதிவான இந்த கடுமையான நிலநடுக்கத்திற்கு கௌதமாலா நாட்டின் மேற்கு பசிபிக் கடற்கரை பகுதிகளில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் சிக்கி 39 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் சரிவர நடக்க அதிபர் மொலினா கலத்தில் இறங்கி செயல்படுகிறார்.
இந்த கடுமையான பூகம்பம் மெக்சிகோ சிட்டி முதல் சான் சல்வேடர் வரை பாதித்துள்ளது. சுனாமியால் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியிருக்கிறது. இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply