பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி  றீகன் என்று பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படும் நடராசா மதீந்திரன் வியாழன் இரவு இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாரிஸ் 20, 341 றூ  டே பிறனீஸ் இல் அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திலிருந்து வெளியேறி வீதிக்கு வந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு முகமூடி தரித்த நபர்கள் பரிதியை நோக்கி மூன்று தடவைகள் சுட்டதாக  ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களிடையே நடைபெற்ற மோதல் இதுவென சந்தேகிப்பதாக பிரெஞ்சு பொலிசார் தெரிவித்துள்ளனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply