பிரதம நீதியரசர் சிராணி ஊடகங்களுக்கு விளக்கமளித்தது தவறு சட்ட நிபுணர்கள் கண்டனம்

பாராளுமன்றத்தில் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பிரதம நீதியரசர் தான் நிரபராதி என்பதை பாராளுமன்ற தெரிவுக்குழுவிலேயே ஆதாரங்களை முன்வைத்து நிரூபிக்க வேண்டும்.அதற்கு மாறாக பிரதம நீதியரசர் ஊடகங்களுக்கு தன்னுடைய வங்கி வைப்புகள் பற்றி விளக்கமளித்து அறிக்கையை தனது சட்டத்தரணிகள் மூலம் வெளியிட்டிருப்பது பாராளு மன்றத்திற்கும், பிரதம நீதியரசர் என்ற உயர் பதவிக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் செயல் என்று இலங்கையின் முன்னணி சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இவ்விதம் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஒருவர் எத்தகைய உயர் பதவி வகித்திருந்தாலும் அது பற்றி தான் நிரபராதி என்பதை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சமுகமளித்து நிரூபிக்க வேண்டுமே ஒழிய வெளியில் ஊடகங்களுக்கு தனது நிலைப்பாட்டை அறிவிப்பது சட்ட விரோதமான செயல் என்றும் அவர்கள் கூறினார்கள்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஒரு குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப் பட்ட பின்னர் அது பற்றி குற்றம் சாட்டப்பட்டவரோ, சம்பந்தப்பட்டவர் மீது குற்றம் சுமத்தியவர்களோ வெளியில் எவ்வித கருத்தையும் தெரிவிப்பது பாராளுமன்ற நல வுரிமைகளை அவமதிக்கும் ஒரு செய லாக கருதப்படும்.

எனவே, இது விடயத்தில் சம் பந்தப்பட்ட இரு தரப்பினரும் மெளனமாக இருந்து தெரிவுக்குழுவின் விசாரணையை சீராக நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம்.

ஆயினும், இப்போது இந்த சம்பிரதாயத்தை மீறி, பிரதம நீதியரசர் கலாநிதி திருமதி ஷிராணி பண் டாரநாயக்க அந்த நிபந்தனையை மீறி தனது நிலைப்பாட்டை ஊட கங்களுக்கு பகிரங்கப்படுத்தியிருப் பதனால் அவர் மீது குற்றம் சுமத் தியவர்களும் இந்தக் குற்றப்பத்திரிகை குறித்து வெளியில் பகிரங்கமாக கரு த்து தெரிவிக்க ஆரம்பித்தால் அதனை தவறு என்று அறிவிப்பது தர்மசங்கடமாக இருக்கும் என்றும் இந்த சட்டத்தரணிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பு

இதேவேளை, பாராளுமன்றத்தில் பிரதம நீதியரசர் கலாநிதி திருமதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றப்பிரேரணை தாக்கல் செய்திருப்பது குறித்து நாட்டில் பலதரப்பட்ட கருத்துக்களை சட்ட நிபுணர்கள் இப்போது வெளியிட்டு வருகிறார்கள். நீதிமன்ற சுதந்திரம் குறித்து கலந்துரையாடல் ஒன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று நடத்தப்படும் என்று வெளிவந்த செய்தி தொடர்பாக அந்தச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வித அறிவித்தல் மூலம் பிரதம நீதியரசருக்கு எதிராக பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட குற்றப் பிரேரணை பற்றி கலந்துரை யாடப்படும் என்ற தப்பபிப்ராயம் நிலவ முடியுமென்றும் சுட்டிக்காட்டியு ள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிராக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பிரேரணை இப்போது பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு விடுக்கப்பட்டிருப்பதனால் இந்தக் குற்றப்பிரேரணைப் பற்றி கலந்துரையாடு வது சட்ட விரோதமான செயல் என்றும் இதனால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அவப் பெயர் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த சங்கம், இந்தக் குற்றப்படத்திரிகை குறித்து முடிவெடுக்கும் பூரண அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கே இருக்கிறதென்றும் சுட்டிக்கட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply