ராஜபக்ஷ அரசின் சர்வாதிகாரத்திற்கான அடையாங்கள் குறித்து கருணாநிதி விளக்கம்

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:  இலங்கையின் ராஜபக்ஷ அரசு படிப்படியாக சிங்களப் பேரினவாத சர்வாதிகாரம் எனும் திசையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே?   ராஜபக்ஷ அரசு ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை நசுக்குவதற்காக பல்வேறு வகையான போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நடத்தி சர்வதேச அரங்கின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.  

ராஜபக்ஷ அரசு தொடர்ந்து சர்வாதிகார திசையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்ட முடியும் என்றாலும், அண்மையில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பல வழக்குகளில் ராஜபக்ஷ அரசுக்கு எதிராக தீர்ப்பளித்த இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஷிரானி பண்டார நாயக மீது பாராளுமன்றத்திலேயே குற்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக ´சண்டே-லீடர்´ பத்திரிகையின் ஆசிரியர் ப்ரெடரிக் ஜான்ஸ் என்பவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுமே ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார அடையாளங்களாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply