கராச்சியில் கொடூரம்: 17 பேர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் நேற்று பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அங்குள்ள ரெசர் பிரிட்ஜ் அருகேயுள்ள பழைய கோலிமர் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியில் சுட்டுக் கொண்டனர். அதில் சாதிக், பாபர், முன்னாவர், ஷாகுத் உள்பட 4 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர்.
பலர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. உடனே, அங்கு பொலிசார் விரைந்து வந்து கொல்லப்பட்டவர்களின் உடல்களை அப்புறப்படுத்தி அங்கு அமைதி ஏற்படுத்தினர். இச்சம்பவத்துக்கு இரு தரப்புக்கு ஏற்பட்ட முன் விரோதமே காரணம் என தெரிவித்தனர்.
மேலும் கராச்சியில் உள்ள குவைதாபாத்தில் பியூச்சர் காலணியில் குடும்பத் தக ராறில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 2 பேர் இறந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். கரீமாபாத், முஷாராப் கோத் மற்றும் ஷெர்ஷா ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். இது தவிர வடக்கு கராச்சி, கோரங்கி, வடக்கு நஷீமாபாத் ஆகிய இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகினர்.
குல்ஷைன்-இ-இக்பால் பகுதியில் உள்ள பிளாக் ஓட்டலில் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயம் அடைந்தார். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. அச்சம்பவத்தை தொடர்ந்து இங்கு கடைகள் அடைக்கப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply