இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்குரிய வசதிகள் போதியனவாக இல்லை – ஜி.ஏ.சந்திரசிறி

மிக நீண்டகாலமாக இடம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள போதும் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்குரிய வசதிகள் போதியனவாக இல்லை. எனவே மீளக்குடியமரவுள்ள மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் செயல்திட்டங்களை முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்களை மீளக் குடியமர்த்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன்இ வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

வட மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர். விஜயலட்சுமி, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம் ஹால்டீன்இ வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன்இ வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான மக்களின் நலன் பேணும் விடயங்கள் தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்னர் மேற்படி  வசதிகளை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

பெரும்பாலான மக்கள் 1991 ஆம் ஆண்டு இடப் பெயர்வுக்குள்ளானவர்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப விரும்புகின்றனர்.

ஆனால் அவர்களின் இருப்பிடங்கள் முற்றிலும் அழிவடைந்த நிலையிலுள்ளன. கல்வி, நீர்ப்பாசனம், வீதி, அடிப்படை வசதிகளும் போதியதாகக் காணப்படவில்லை. மீளக்குடியமரவுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய விதத்தில் செயல்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply