அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை முன்வைக்கத் தயார் – அரசு
தேசிய பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்றை முன் வைக்க தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்சமயம் நிலவும் மாகாண சபை முறைமைக்குப் பதிலாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு கொண்ட 19 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த சீர்திருத்த சட்டமூலம், தேசிய பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த நிலையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணையுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுபிக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்து கொள்வதற்கு தேவையான கால அவகாசத்தை வழங்க தயார் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை முன்னோக்கிச் செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என தெரிவிக்கப்பட்டள்ளது.
19வது சீர்திருத்தமானது, தற்சமயம் காணப்படும் 13வது அரசியல் அமைப்பிற்கு மாற்றீடாக அமையும் எனவும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply