இதுவரை 700 புலிகள் சரண் எஞ்சியோரும் சரணடைந்து விடுவர்:அமைச்சர் கெஹெலிய
படையினரை எதிர்கொள்ள முடியாமல் புலி உறுப்பினர்கள் சரணடைந்து விடுவார்கள் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதுவரை 700 புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளதாகக் கூறிய அவர், சரணடைவதற்கான பொறி முறையொன்றை அரசாங்கத்தால் ஏற்படுத்த முடியாது என் றும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு எந்த நேரமும் புலிகள் சரணடையலாம் என்றும் தெரிவித்தார்.
ஆயுதங்களின்றி சரணடைவோருக்கு எந்நேரமும் மன்னிப்பு உண்டு என்று கூறிய அமைச்சர், புலிகளின் தலைவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார். படையினரால் மீட்பதற்கு எஞ்சியுள்ள மொத்தப் பிரதேசத்தில் நாற்பது வீதம் மோதல் தவிர்ப்புப் பிரதேசம் என்று தெரிவித்த அவர், அறுபது வீதமான பகுதியிலேயே எஞ்சிய பொதுமக்களும் புலிகளால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை ஓரிருநாளில் படையினரால் மீட்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் இயன்ற அளவு சிவிலியன்கள் பாதிப்படைவதை தவிர்த்தவாறு படையினர் முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply