சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கத் தயார்: ஜனாதிபதி

சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நான் லண்டன் சென்றிருந்த போது விமான நிலையம், தங்கியிருந்த ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் தீவிரவாதிகள் தங்களது கொடிகளைக் காட்டி ஆர்ப்பட்டம் நடத்தினார்கள்.

எங்களது மக்களும் இந்தப் போராட்டங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் சிங்கக் கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்துகின்றார்கள். போராடிய இராணுவச் சிப்பாய்கள் மட்டுமன்றி அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டும்.

ஊனமுற்ற நாட்டிலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர். தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. போரை முடிவுறுத்தியதன் மூலம் எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் பாரியளவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

போரை முடிவுறுத்தியமை காரணமாக சிலர் எம்மை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்றனர். எம்மையும், படைவீரர்களையும் சர்வதேச நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.

எனினும், இந்த சவால்களை முறியடிப்பதற்கும் சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கவும் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply