தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் ஜனாதிபதி செயற்பட மாட்டார் : டக்ளஸ்

தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட மாட்டார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.13ம் திருத்தச் சட்டத்திற்கு பதிலாக திவிநெகும சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது தமது நிலைப்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரப் பகிர்வினை வழங்குவதற்காக 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த சட்டத் திருத்தத்தில் 13ம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் மட்டுமன்றி ஜனாதிபதியினால் ஏற்கனவே இணங்கப்பட்ட அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யதார்த்தமான அதிகாரப் பகிர்வினையே தமிழ் சமூகம் வேண்டி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அதிகாரப் பகிர்வு தொடர்பான அண்மைய நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் ஒரு சில தரப்பு கவலை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு கிழக்கு கள நிலைமைகள் தொடர்பில் ஒரு பகுதி புலம்பெயர் தமிழர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சர்வதேச சமூகமும் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கும் உண்மை கள நிலைமைக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply