புலிகளின் தடைகளையும் மீறி 5000 சிவிலியன்கள் நேற்று வருகை

மோதல்கள் நடைபெறும் வன்னிப் பகுதியிலிருந்து நேற்று மேலும் சுமார் 7500 பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். இவர்களுள் மிதிவெடியில் சிக்கி காயமடைந்த ஒரு வரும், புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவரும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நேற்றுவரை வவுனியாவுக்குள் 8200 பொதுமக்கள் வந்துள்ளனர். வன்னியிலிருந்து வரும் பொது மக்களை தங்கவைக்கவென பம்பைமடுவில் மேலும் ஒரு முகாம் நேற்றுமுன்தினம் ஆரம்பிக் கப்பட்டுள்ளது.

விஸ்வமடு, இராமநாதபுரம், புதுக்குடியிருப்பு, குப்பிலான் குளம் பகுதியிலிருந்து நேற்றுமுன் தினம் 5000 பேர் படை யினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் நேற்று படையினர் கிளிநொச்சிக்கு அழைத்து வந்தனர். இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்தவர்களுள் சுமார் 1000 பேர் நேற்று வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். காயமடைந்தவர்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 400 நோயாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து தருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது.

புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இரண்டு சனசமூக நிலையங்களிலேயே தற்காலிகமாக புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி இயங்குகின்றது.

இப்பகுதி கடற்கரைப் பகுதியை அண்டியுள்ளதால் நோயாளிகளை கடல்மார்க்கமாகவேனும் திருகோணமலைப் பிரதேசத்திற்கு அழைத்துவருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி நகர் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்துள்ளமையால் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு மாவட்ட வைத்திய பணிப்பாளர் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்டடாக்டர்கள் அடங்கிய குழுவொன்றை அனுப்பவும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியை மீண்டும் இயங்கவைக்கவும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply