இலங்கை இறுதிப்போர்! கசியும் உண்மைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
கசிந்ததாகக் கூறப்படும் ஐநா அறிக்கை அதிகாரபூர்வமாக வெளிவந்த பின்னர் அது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் கூறியுள்ளார். யுத்த வேளையில் ஐநா அதிகாரிகள் வன்னியில் இருந்து வெளியேறியமையானது – அங்கு செய்தியாளர்களோ அல்லது வேறு எந்த கண்காணிப்பாளர்களோ செல்ல அனுமதிக்கப்படாத நிலையில்- அங்கு ஒரு சாட்சிகளற்ற யுத்தத்துக்கு காரணமாகிவிட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐநா வன்னியில் இருந்து வெளியேறியதால் அங்கு சாட்சிகளற்ற ஒரு போர் நடக்கும் நிலை உருவாகி, பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிட்டது என்று இரா சம்பந்தர் கூறுகிறார்.
தமக்கு எவரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது என்கின்ற போதிலும் போர் வேளையில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மை அறியப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐநா தமது ஆணைக்கு உட்பட்ட வகையில் செயற்பட்டதா என்பதை அதன் செயலாளர் ஆராய்ந்து அதற்கான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply