வன்னியிலிருந்து வவுனியாவுக்கு 13,000 வருகை

வன்னிப் பகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களால் அங்கிருந்து 13,000 இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்திருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை காலை வரை 8,400 பேர் வவுனியாவில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருந்ததாகவும், அதன் பின்னர் 5,000 பேர் வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு வந்தவர்களைத் தங்கவைப்பதற்கு 10 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், பலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் பலர் நோயுள்ளபோதும், அவர்களுக்குச் சிகிச்சைவழங்கப் போதியளவு வைத்தியர்கள் இல்லாமையால் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply