மனித உரிமை மிகவும் முக்கியம்! இலங்கைக்கு உகண்டா ஜனாதிபதி ஆலோசனை
மனித உரிமை என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் துரதிஷ்டவசமாக சில மேலை நாடுகள் மனித உரிமை விவகாரத்தை ஆழமாக பார்ப்பதில்லை. விஞ்ஞான ரீதியில் நோக்குமிடத்து அது மிகவும் முக்கியமானதாகும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உகண்டா ஜனாதிபதி யொதேரி ககுட்டா முசதேனி தெரிவித்தார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடிவில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்றகண்டவாறு குறிப்பிட்டார்.
உகண்டா ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிடுகையில்
இலங்கைக்கான விஜயத்தின்போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக தொழில்நுட்ப பயிற்சி, பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு, அரசியல் விவகாரம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை மூன்றாம் உலக அபிவிருத்தி அடைந்துவரும் நாடாகவுள்ளது. இந்நிலையில் இலங்கையிலிருந்து உகண்டாவில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. இலங்கை வர்த்தகர்கள் உகண்டாவில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். உகண்டாவில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை உதவியாக வழங்கியுள்ளது.
மனித உரிமை என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் துரதிஷ்டவசமாக சில மேலை நாடுகள் மனித உரிமை விவகாரத்தை ஆழமாக பார்ப்பதில்லை. சில சர்வதேச தரப்புக்கள் இதனை ஆழமாக பார்ப்பதில்லை. விஞ்ஞான ரீதியில் நோக்குமிடத்து அது மிகவும் முக்கியமானதாகும். நான் சுதந்திரத்துக்காக போராடியவன். எனதே மனித உரிமை என்பது முக்கியமானதாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply