நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறுத்துமாறு கோரி வழக்குத் தாக்கல்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அரசாங்கத்திடம் சமர்பித்துள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சிங்கள ஜாதிக பெரமுன என்ற அமைப்பின் செயலாளர் ஜயந்த லியனகே நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என ஆணைக்குழு செய்து பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மனுதார் குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய அதிகாரத்தை பரவலாக்குவதற்கு எதிராக புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன், அந்த திருத்தச் சட்டம் எதிர்கால ஈழ நாட்டுக்கு அடித்தளமாக அமையும் என அவர்களi அனைவரும் சுட்டிக்காட்டியுள்ளனர் எனவும் மனுதாரர் கூறியுள்ளார்.

மனு தொடர்பில் வாதங்கள் மூலம் மேலும் கருத்துக்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply