வரவு – செலவுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2013ம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (17) பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. கடந்த 8ம் திகதி சமர்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் இடம்பெறவுள்ள நிலையில் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் எதிர்வரும் 19ம் திகதி தொடக்கம் டிசம்பர் 8ம் திகதிவரை வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
வரவு – செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8ம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply