ஐநாவின் போக்கினாலேயே பெருமளவான மக்களின் உயிர்ச் சேதம் ஏற்பட்டது – ரோஹித்த பொகொல்லாகம

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மெத்தனப் போக்கினால் பெருமளவு பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.  ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் தமது கடமையை செய்திருந்தால் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்புக்களை தடுத்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
2007ம் ஆண்டு ஆரம்பம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த உத்தியைப் பயன்படுத்திக் கெண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த தந்திரோபாயம் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிந்திருந்த போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சட்டவிரோதமான முறையில் பொதுமக்களை தடுத்து வைத்திருக்கின்றார்கள் என்ற அரசாங்கத்தின் முறைப்பாட்டை ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனத்திற் கொள்ளத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் பணியாளர்களை கடத்திச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் எவரும் அதற்கு கண்டனம் வெளியிடவில்லை என பொகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply