இலங்கை விவகாரத்தில் கனடா கடினமான தன்மையையே கையாளும்

இலங்கை விடயத்தில் கனடா இறுக்கமாகவும், முதன்மையாகவும் நடந்து கொள்ளும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயிர்ட் தெரிவித்துள்ளார். கனேடிய பாராளுமன்றத்தில் நேற்று இலங்கை விவவாகரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழருமான ராதிகா சிற்சபேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வெயின் மார்சன் ஆகியோர் இலங்கை குறித்து கனேடிய அரசின் நிலைப்பாட்டை வினவினர்.

இலங்கையின் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அவலங்களுக்கு ஐ.நா பொறுப்புகூறவேண்டிய நிலையில் உள்ளது.

மாபெரும் மனித அவலம், மற்றும் அதிகளவிலான பொதுமக்கள் உயிரிழப்புக்கள் அக்காலப்பகுதியில் நடைபெற்றது ஊர்ஜிதமாகியுள்ளது. இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் சர்வதேச சமூகத்தால் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகின்றன.

இவ்விவகாரத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. பக்கசார்பற்ற, சுதந்திரமான சர்வதேச விசாரணையை இலங்கை ஏற்றுக்கொள்ளும் வரை, அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாட்டில் பங்கேற்க போவதில்லை என்றோ இதே போன்று பிற அங்கத்துவர்களையும் ஊக்குவிப்போம் என்றோ ஆளும் கன்சர்வேட்டிவ் அரசு மீண்டும் வாக்குறுதி அளிக்குமா என ராதிகா சிற்சபேசன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயிர்ட், இலங்கை விடயத்தில் கனடா அரசு போன்று எந்தவொரு அரசும் செயற்பட்டதில்லை. தமிழ் மக்கள் உட்பட இலங்கையில் உள்ள மக்களின் நலன் மனித உரிமைகள் குறித்து கனடா தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை. எனினும் இவ்விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய மிகச்சிறந்த தீர்மானத்தை இந்த அரசு நிச்சயம் எடுக்கும் என மீண்டும் வலியுறுத்தி கொள்வதாகவும், இலங்கை விடயத்தில் கனடா இறுக்கமாகவும், முதன்மையாகவும் நடந்து கொள்ளும் எனவும் அவர் பதில் அளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply