வடகொரியா-தென் கொரியாவிற்கிடையில் போர் மூளும் அபாயம்

கடந்த 1950-1953-ம் ஆண்டுகளில் நடந்த கொரியா போருக்கு பிறகு வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே பதட்டம் நிலவி வருகிறது.  இந்த நிலையில், வடகொரியா நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்க கூடிய ஏவுகணையை தயாரித்து வருகிறது. இதை வடகொரியா மறுத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் செயற்கை கோள் படம் மூலம் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் ஏவுகணை உதிரிபாகங்கள் தயாரிப்பதும், தொங்சாங்கில் ஏவுகணை ஏவுவதற்கான கூண்டு அமைப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும், இம்மாத இறுதியில் அந்த ஏவுகணையை ஏவி பரிசோதித்து பார்க்கவும் வடகொரியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்கா தனது நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவிடம் தெரிவித்து உஷார் படுத்தியுள்ளது.

ஏவுகணை தயாரிப்பதன் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்த கூடும் என தென் கொரியா கருதுகிறது. எனவே, வடகொரியா எல்லையில் உள்ள யான்பியாங் தீவில் தென் கொரியா போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. அதற்காக ஆயுதம் தாங்கிய போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி பியாங்யாங் தீவு மீது வடகொரியா குண்டு வீசி தாக்கியது. அதில், 2 ராணுவ வீரர்களும், பொது மக்கள் 2 பேரும் பலியாகினர். இது போன்ற தாக்குதலை வடகொரியா மீண்டும் நடத்தலாம் என்று எதிர்பார்ப்பதால் தென் கொரியா அங்கு உஷார் நிலையில் உள்ளது. ரோந்து கப்பல்களும் அங்கு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அதனால் வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே போர்பதட்டம் நிலவுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply