13 வது திருத்தச் சட்டத்தை நீக்கினால் இந்திய – இலங்கை உறவு பாதிக்கப்படும்!

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யவோ, அதில் மீண்டும் திருத்தங்களை மேற்கொள்ளவோ, அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், சில எதிர்க்கட்சிகளும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள நிலைப்பாடுகள் அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஒன்று தொடர்பாக தவறான நிலைப்பாடுகளை வெளியிடுவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் குறித்து, தவறான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் சிலருக்கு இப்படியான நிலைமையை ஏற்படுத்தும் தேவையிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்று செயற்பாடுகள் இன்றி, திடீரென 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கினால், இந்தியா மற்றும் இலங்கை இடையில் இருக்கும் உறவுகள் பாதிக்கப்படுவதுடன், நாடும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் அமைச்சர் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply