இரண்டு ஆண்டுளாக பணையக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க நடவடிக்கை
சோமாலியல் கடல் கொள்ளையர்களால் நடுக்கடலில் பிடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுளாக பணையக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள இந்திய மாலுமிகள் ஏழு பேரை விரைவில் மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். கேரள மாநிலத்தவர் உள்ளிட்ட இந்திய மாலுமிகளை மீட்க, இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள சோமாலிய கடல் கொள்ளையர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஆகியோரைச் சந்தித்து கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்தார்.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த அமைச்சர் வாசன், மும்பையில் சிறை வைக்கப்பட்டுள்ள 120 சோமாலிய கடல் கொள்ளையர்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
சோமாலிய கடல் கொள்ளையர்களை விடுவித்து, இந்திய மாலுமிகளை விரைவி்ல் பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு எச்சரிக்கையாக எடுத்து வருவதாகவும், அந்த முயற்சி வெற்றி பெறும் என்றும் வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply