இலங்கை – ரஷ்ய முதலீட்டு துறைகளை நெருக்கமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைகளை நெருக்கமாக முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான ரஷ்யாவின் புதிய தூதுவர் அலெக்ஸாண்டர் ஏ காச்வா தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சில்- அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியபோதே ரஷ்யத் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூதுவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சுற்றுலாத்துறைகள் குறித்து தமது நாட்டு சுற்றுலாப் பயணிகளை தெளிவுபடுத்துவதற்கு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதாகவும் அத்துடன், இலங்கை தொடர்பான தகவல்களை ரஷ்ய இலத்திரனியல் மற்றும் அச்சுத் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விசேட ஊடகக் குழுவான்றை நியமிப்பதற்கும் தாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்யாவின் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply