பங்களாதேஷ் தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள அஷுலியா பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற தீப்பரவல் சம்பவத்தில் இலங்கையர்கள் பாதிக்கப்பட வில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரத் வேரகொட இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷில் உள்ள ஆடைத் தொழிலகங்களில் இலங்கையர்கள் பலர் பணியாற்றி வருகின்ற போதும், தீப்பரவல் ஏற்பட்ட தொழிலகத்தில் இலங்கையர்கள் இருக்கவில்லை என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

பங்களாதேஷில் சுமார் 5 ஆயிரம் இலங்கை பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த தீப்பரவல் சம்பவத்தில் 9 மாடிகளைக் கொண்ட கட்டிடம் பாரிய சேதங்களை எதிர்கொண்டுள்ளது.

பங்களாதேஷ் ஆடைத் தொழிலக தீப்பரவல் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை சூரியனின் வெளிநாட்டுச் செய்திகளில் எதிர்பாருங்கள்..

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply