விஸ்வமடுவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 23 பேர் பலி, 64 பேர் காயம்
விஸ்வமடுவிலுள்ள அகதிகள் இடைத் தங்கல் முகாமுக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும் 64க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
கொல்லப்பட்டவர்களில் எண்மரும் காயமடைந்தோரில் 40 பேரும் பொதுமக்களாவர்.
இன்று காலை 11.30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை பெண் குண்டுதாரியொருவர் இந்தக் குண்டை வெடிக்கச் செய்துள்ளாரெனவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply