வருட இறுதிக்குள் அமைச்சரவையில் மீளமைப்பு

அமைச்சரவை மீளமைப்பு செய்யப்பட உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மீளமைப்பு பெரும்பாலும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைச்சரவை மீளமைப்பின் போது பல்வேறுப்பட்ட அமைச்சுகளில் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி, மின்சக்தி, வெளிவிவகார, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு விவகாரதுறை உள்ளிட்ட அமைச்சுக்கள் சிலவற்றில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் டி எம் ஜயரட்ண சுகவீனம் காரணமாக அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரின் சுகநலத்தை கேட்டறிவதற்காக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்த நிலையில், இந்த வாரமளவில் பிரதமர் இலங்கை வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நிறைவடையும் வரையில் அமைச்சரவை மீளமைப்பு செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply