இலஙகை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது:நாடாளுமன்ற உறுப்பினர் கருணாசேன கொடித்துவக்கு
உலகமெங்கும் நிலவி வரும் பாரிய பொருளாதார நெருக்கடி இன்று இலங்கையையும் பல வழிகளிலும் வெகுவாகப் பாதித்துள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்தார்.இன்று காலை ஐக்கிய தேசிஅக் கட்சியின் ஊடக மையத்தில் எஅடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில், ” பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க ஏனைய நாடுகள் பல வழிகளைக் கையாண்டு வருகின்றன. நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும், தற்போது இப்பிரச்சினையைத் தீர்க்கப் பல வழிகளை அந்நாடு கையாண்டு வருகின்றது.
ஒரு நாட்டின் அரசாங்கம் என்ற வகையில் அங்கு கட்சி பேதம் இல்லாமல் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அதே போன்று ஆசியாவிலும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடி தீர உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பொருளாதாரப் பிரச்சினை எமது நாட்டின் விவசாயத்துறை மற்றும் பல்வேறு துறைகளை பாதித்து வருகிறது. இத்தகைய சூழ் நிலையில் எமது அரசு எந்த விதமான நடவடிக்கையையும் செயற்படுத்தியதாகத் தெரியவில்லை. இவ்வாறான சூழலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தேயிலை, இறப்பர் உற்பத்திகளின் சந்தை வாய்ப்பிலும் பாரிய தாக்கத்தையும் நாம் எதிர்கொண்டு வருகின்றோம்.
நம் நாட்டுப் பணத்தின் பெறுமதி குறைந்துள்ளது. இதனால் ஆடை ஏற்றுமதி, கோட்டா முறைகள் போன்றவையும் பாதிக்கபடும் நிலை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. தேயிலைக்கு மானியம் வழங்குவதாக இரு மாதங்களுக்கு முன் அரசு கூறியது. உரமானியம் வழங்குவது முக்கியமானதல்ல. தேயிலைக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
நாட்டில் யுத்தம் நடக்கிறது. அதை நடத்தவும் நம் நாட்டின் பொருளாதாரம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். பெற்றோல் விலை உலகில் குறைந்துள்ளது. ஆனால் நம் நாட்டில் அதைக் குறைக்க முடியாத சூழலில் எமது அரசு இருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply